என் மலர்
செய்திகள்

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் 1-ந்தேதி முதல் உண்ணாவிரத போராட்டம்: என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர் சங்கம் அறிவிப்பு
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் ஜூலை 1-ந்தேதி முதல் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.
நெய்வேலி:
நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிநிரந்தரம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர். போராட்டத்தை முன்னின்று நடத்தி வரும் ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் சிறப்புச் செயலாளர் சேகர் தலைமையில் கடந்த மார்ச் மாதம் வேலை நிறுத்த அறிவிப்பு நோட்டீஸ் அளித்திருந்தனர்.
அதன் பின்னர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருந்த நிலையில், தொழிலாளர் துறையினர் ஏற்பாட்டின் படி சமரச பேச்சுவார்த்தை 4 கட்டமாக நடந்தது. இறுதியாக நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், ஜூன் 1-ந்தேதி நடைபெற இருந்த வேலை நிறுத்தத்தை தற்காலிமாக ஒத்திவைத்தனர்.
அடுத்த 5-வது கட்ட பேச்சுவார்த்தை வருகிற 23-ந்தேதி நடக்கவுள்ள நிலையில், ஜீவா சங்க பேரவை கூட்டமும், பேச்சுவார்த்தை குறித்த விளக்க கூட்டமும் மந்தாரக்குப்பத்தில் நடந்தது.
சங்க தலைவர் அந்தோணி செல்வராஜ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் செல்வமணி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக சங்கத்தின் சிறப்புத் தலைவர் ராமமூர்த்தி, ஏ.ஐ.டி.யூ.சி. தொலை தொடர்பு ஒப்பந்த சங்க மாநில பொதுச் செயலாளர் ஆனந்தன், சிறப்புச்செயலாளரும், சட்ட ஆலோசகருமான சேகர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினை அமல்படுத்தி பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும், தொழிலாளர்களை அச்சுறுத்தி மிரட்டும் என்.எல்.சி. பாதுகாப்பு அதிகாரி மீது நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. தீர்மானத்தை பொருளாளர் கல்யாண சுந்தரம் வாசிக்க, அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
பின்னர் சிறப்புச் செயலாளர் சேகர் கூறும்போது, வருகிற 23-ந்தேதி நடைபெறவுள்ள 5-வது கட்ட பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை என்றால், வருகிற ஜூலை 1-ந்தேதி ஒப்பந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருடன் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். அதைத்தொடர்ந்து வேலை நிறுத்தம் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளோம் என்றார்.

Next Story