என் மலர்
செய்திகள்

பெருந்துறை அருகே சப்–இன்ஸ்பெக்டர் தாயிடம் தங்க சங்கிலி பறிப்பு
பெருந்துறை:
அரச்சலூர் போலீஸ் நிலையத்தில் சப்– இன்ஸ் பெக்டராக பணிபுரிந்து வருபவர் தாமஸ். இவரது தாயார் ஆலீஸ் (வயது 80). பெருந்துறையை அடுத்துள்ள சிலேட்டர் நகர், சர்ச் வீதி பகுதியில் வசித்து வருகிறார்.
இவர் நேற்று மாலை தனது வீட்டில் வளர்த்து வரும் ஆட்டுக்குட்டிகளுக்கு தழை பறிப்பதற்காக அதே பகுதியில் ரோட்டோரத்தில் உள்ள மரத்தில் தழைகளை பறித்து கொண்டு வீட்டுக்கு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது இவருக்கு பின்னால் நடந்து வந்த ஒரு நபர் இவரது கழுத்தில் இருந்த 2 பவுன் தங்கச்சங்கிலியை திடீரென பறித்து கொண்டு முன்னால் தயாராக நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி இன்னொருவருடன் தப்பி சென்று விட்டார்.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை துரத்தி பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து ஆலீஸ் பெருந்துறை போலீசில் புகார் செய்தார்.
இதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தப்பி சென்ற மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகிறார்கள்.






