என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரட்டை கொலை வழக்கு: குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது
    X

    இரட்டை கொலை வழக்கு: குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது

    கடலூர் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்
    கடலூர் :

    கடலூரில் கடந்த மாதம் 21–ந் தேதி ரெட்டிச் சாவடியைச் சேர்ந்த அண்ணன், தம்பிகளான வினோத்குமார், சதீஷ் குமார் ஆகியோரை 10 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக கொலை செய்தது.

    இந்த இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய ரெட்டிசாவடியை சேர்ந்த லட்சுமணன், கீழஅழிஞ்சிப்பேட்டையை சேர்ந்த டேவிட்ராஜ், ராம்குமார், சதீஷ்குமார், அருண்குமார், கணபதி, பாலமுருகன், சவுந்தர்ராஜன், ஆனந்தராஜ், சுமான் ஆகியோரை போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் ரெட்டிச் சாவடியை சேர்ந்த லட்சுமணன், கீழ அழிஞ்சிபட்டைச் சேர்ந்த டேவிட் ராஜ், சதீஷ்குமார் ஆகிய 3 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பரிந்துரை செய்தார்.

    அதன் பேரில் அந்த 3 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    Next Story
    ×