என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பத்தூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: புதுமாப்பிள்ளை பலி - ஒருவர் படுகாயம்
    X

    திருப்பத்தூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: புதுமாப்பிள்ளை பலி - ஒருவர் படுகாயம்

    திருப்பத்தூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் புதுமாப்பிள்ளை பலியானார் மற்றொருவர் படுகாயமடைந்தார்.
    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் அழகுபாண்டியன் (வயது 32). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்நிலையில் நேற்று அழகுபாண்டியன் வேலை நிமித்தமாக திருப்பத்தூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். திருப்பத்தூர் ரோட்டில் உள்ள தாணிப்பட்டி விலக்கு அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் 2 மோட்டார் சைக்கிள்களும் ரோட்டில் கவிழ்ந்தன.

    இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அழகு பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த திருப்பத்தூரை சேர்ந்த அல்லா பிச்சை படுகாயமடைந்தார்.

    இந்த விபத்து குறித்து திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 2 மாதத்தில் வாலிபர் விபத்தில் சிக்கி இறந்தது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்த உள்ளது.
    Next Story
    ×