என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேப்பூர் அருகே பெண் அழைப்பு ஊர்வலத்தில் மணப்பெண் மயங்கி விழுந்து சாவு - உறவினர்கள் சோகம்
    X

    வேப்பூர் அருகே பெண் அழைப்பு ஊர்வலத்தில் மணப்பெண் மயங்கி விழுந்து சாவு - உறவினர்கள் சோகம்

    வேப்பூர் அருகே பெண் அழைப்பு ஊர்வலத்தில் மணப்பெண் மயங்கி விழுந்து இறந்ததால் உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர்.
    வேப்பூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27). இவருக்கும் வேப்பூர் அருகே திருப்பெயர் பகுதியைச் சேர்ந்த லக்கேஷ்வரி (21)க்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது.

    இவர்களது திருமணம் இன்று காலை விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நடைபெற இருந்தது. திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.

    நேற்று இரவு பெண் அழைப்பு ஊர்வலம் நடைபெற்றது. திருப்பெயரில் இருந்து நகர் கிராமம் பகுதிக்கு லக்கேஷ்வரியை காரில் ஊர்வலமாக அழைத்து வந்தனர். உறவினர்கள் ஏராளாமானோர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

    நடுவழியில் திடீரென்று லக்கேஷ்வரிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனிளிக்காமல் லக்கேஷ்வரி பரிதாபமாக இறந்தார்.

    மணப்பெண் திடீரென்று இறந்ததால் இங்கு நடைபெற இருந்த திருமணம் நின்றது. திருமணத்திற்கு வந்த உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர். மணமகள் இறந்த தகவல் அறிந்த மணமகன் அதிர்ச்சி அடைந்தார். மிகவும் சோகமாக காணப்பட்டார்.
    Next Story
    ×