என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரைக்குடியில் கூடுதல் வரதட்சணை கேட்டு பெண் துன்புறுத்தல்: கணவர் உள்பட 2 பேர் மீது வழக்கு
    X

    காரைக்குடியில் கூடுதல் வரதட்சணை கேட்டு பெண் துன்புறுத்தல்: கணவர் உள்பட 2 பேர் மீது வழக்கு

    கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணை துன்புறுத்தியதாக கணவர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.

    காரைக்குடி:

    காரைக்குடி அண்ணா நகரை சேர்ந்தவர் சகாயம் எட்வின்ராஜ் (வயது36). இவரது மனைவி தேவ சங்கீதா (29). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. அப்போது 28 பவுன் நகை, சீர்வரிசை பொருட்கள் வர தட்சணையாக கொடுக்கப்பட்டன.

    தற்போது இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 பேருக்கும் ஏற்பட்ட பிரச்சினையில் தேவசங்கீதா கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இந்நிலையில் தேவசங்கீதா காரைக்குடி அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் செய்துள்ளார். அதில் கடந்த 4–ந்தேதி நான் என்னுடைய கணவர் வீட்டிற்கு சென்றபோது கணவர் சகாயம் எட்வின் ராஜ், அவரது தம்பி குழந்தை ராஜன் ஆகியோர் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதோடு கொலை மிரட்டலும் விடுத்ததாக தெரிவித்துள்ளார்.

    இதன்பேரில் சப்–இன்ஸ் பெக்டர் சீதாலட்சுமி விசாரணை நடத்தி சகாயம் எட்வின்ராஜ் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.

    Next Story
    ×