search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேப்பூர் அருகே வாலிபர் விஷம் குடித்து பலி
    X

    வேப்பூர் அருகே வாலிபர் விஷம் குடித்து பலி

    வேப்பூர் அருகே உடல்நிலை பாதிப்படைந்த வாலிபர் விஷம் குடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
    வேப்பூர்:

    வேப்பூர் அருகே உள்ள கண்டப்பங்குறிச்சியை சேர்ந்தவர் பழனிவேல். இவருடைய மகன் சிங்ககுட்டி (வயது 24), தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், உடல்நிலை சரியாகவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த சிங்ககுட்டி விஷத்தை குடித்து மயங்கிய நிலையில் உயிருக்கு போராடி கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி சிங்ககுட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிங்ககுட்டி தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×