என் மலர்
செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது பொக்லைன் எந்திரம் மோதல்: 3 பேர் படுகாயம்
மோட்டார் சைக்கிள் மீது பொக்லைன் எந்திரம் மோதியதில் 3 பேர் காயம் அடைந்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பொக்லைன் எந்திர டிரைவரை கைது செய்தனர்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள வெற்றியார்வெட்டு காலனி தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் சந்தோஷ் (வயது 16). இவரது நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த சிவசங்கர் (17), வினோத் (18). இவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் அதே பகுதியில் உள்ள தோட்டத்திற்கு குளிக்க சென்று கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிளை சந்தோஷ் ஓட்டினார். அப்போது அந்த வழியாக வந்த பொக்லைன் எந்திரம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த 3 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.
இது குறித்து சந்தோஷ் மீன்சுருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராயர் வழக்குப்பதிவு செய்து, மீன்சுருட்டி அருகே உள்ள பாகல்மேடு கிராமத்தை சேர்ந்த பொக்லைன் எந்திர டிரைவர் காளிமுத்துவை (33) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story