என் மலர்
செய்திகள்

காஞ்சீபுரத்தில் குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
காஞ்சீபுரத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 2 பேர் கலெக்டரின் உத்தரவுப்படி குண்டர் சட்டத்தில் கைசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜி, பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். இவர்கள் இருவர் மீதும் காஞ்சீபுரத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் மிரட்டல், வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி மாவட்ட கலெக்டர் கஜலட்சுமிக்கு பரிந்துரை செய்தார்.
கலெக்டரின் உத்தரவுப்படி ராஜி, சதீஷ் ஆகிய 2 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story