என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடங்குளம் 2–வது யூனிட்டில் 10 நாளில் உற்பத்தி தொடக்கம்: அணு ஆராய்ச்சி கழக தலைவர் பேட்டி
    X

    கூடங்குளம் 2–வது யூனிட்டில் 10 நாளில் உற்பத்தி தொடக்கம்: அணு ஆராய்ச்சி கழக தலைவர் பேட்டி

    கூடங்குளம் 2-வது யூனிட்டில் 10 நாளில் உற்பத்தி தொடங்கப்படும் என்று அணு ஆராய்ச்சி கழக தலைவர் பேட்டி அளித்துள்ளார்.

    ஆலந்தூர்:

    மும்பையில் இருந்து சென்னை வந்த அணு ஆராய்ச்சி கழக தலைவர் ஷேகர்பாசு விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:–

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2-வது யூனிட்டில் அனைத்து சோதனையும் முடிந்து தயார் நிலையில் உள்ளது. அதில் இன்னும் 10 நாளில் அணு உற்பத்தி தொடங்கப்படும்.

    கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது. இதை மீனவர்கள், பொது மக்கள் உணர வேண்டும். கல்பாக்கம் அனல் மின்நிலையம் 40 ஆண்டாக செயல்பட்டு வருகிறது. அங்கு யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    கூடங்குளம் 3 மற்றும் 4-வது அணுஉலைகள் பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. அது முழுமையாக முடிய 7 ஆண்டு ஆகும். அதுமட்டுமின்றி 5, 6-வது அணுஉலைகள் தொடங்க திட்டமிட்டு அதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான பணி அடுத்த ஆண்டு தொடங்கப்படும்.

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 6 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. அதில் பாதி தமிழகத்துக்கு தரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×