என் மலர்
செய்திகள்

விக்கிரமங்கலம் அருகே கல்லூரி மாணவி மாயம்
விக்கிரமங்கலம் அருகே மாயமான கல்லூரி மாணவி குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
விக்கிரமங்கலம் அருகேயுள்ள செட்டித்திருக்கோணம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் தனசேகர். இவரது மகள் தமயந்தி ( வயது 17). அருகிலுள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு கழிப்பறைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் வெகு நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தனசேகரின் மனைவி பவுனம்மாள் தன் உறவினர்களை அழைத்துக்கொண்டு பல இடங்களில் தேடினார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் தனசேகர் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் வழக்கு பதிவு செய்து தமயந்தி எங்கு சென்றார், யாராவது அவரை கடத்தி சென்றனரா என்று விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.
Next Story






