என் மலர்
செய்திகள்

செங்கல்பட்டு ஜமாபந்தியில் வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. மனுக்கள் வாங்கினார்
செங்கல்பட்டு தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜூன் 1 முதல் 8-ந்தேதி வரை காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை ஜமாபந்தி நடைபெறுகிறது.
இதன் தொடக்க விழா நிகழ்ச்சி செங்கல்பட்டு தாலுகா அலுவலகத்தில் நடந்தது. வருவாய் கோட்ட அலுவலர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், 1425–ம் பசலிக்கான வருவாய் தீர்ப்பாயத்தை (ஜமாபந்தி) தொடங்கி வைத்தார்.
பட்டா மாற்றம் முதியோர் உதவித் தொகை, விதவைகள் உதவித் தொகை, புதிய ரேஷன் அட்டைக்கான மனு போன்றவைகள் பெறப்பட்டு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது.
தாசில்தார் பரமளவர்தனி, சமூகநலத்துறை தாசில்தார் பாக்கியலட்சுமி, வட்ட வழங்கல் அலுவலர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் லோகநாதன் உள்பட அனைத்து துறைகளை சேர்ந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர். துணை வட்டாட்சியர் ஆறுமுகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.

Next Story