என் மலர்
செய்திகள்

ஜெயங்கொண்டத்தில் பிளஸ்–2 மாணவி மாயம்
ஜெயங்கொண்டத்தில் வீட்டில் இருந்த பிளஸ்–2 மாணவி மாயமானது குறித்து பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் தேடி வருகிறார்கள்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அடிப்பள்ளத் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் தீபா (20). இவர் சமீபத்தில் 12–ம் வகுப்பில் தேர்ச்சிப்பெற்று மேல்படிப்பு படிக்க இருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த தீபாவை காணவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது தாயார் திலகம் ஜெயங்கொண்டம் போலீசில் புகார் அளித்ததின் பேரில் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி வழக்குபதிவு செய்து தீபாவை தேடி வருகிறார்.
Next Story






