என் மலர்
செய்திகள்

வாக்காளர்கள் பட்டியலில் இறந்தவர் பட்டியலில் பெயர் இருப்பதால் தகவல் அறியும் சட்டத்தில் விளக்கம் கேட்கும் வாக்காளர்
மறைமலைநகரில் 30 ஆண்டாக வசிக்கிறார் இறந்தவர் பட்டியலில் உயிருடன் இருப்பவர் பெயர் தகவல் அறியும் சட்டத்தில் விளக்கம் கேட்கும் வாக்காளர்.
சென்னை:
மறைமலைநகர் புவனேஸ்வரி அம்மன் நகரை சேர்ந்தவர் மோகன் (50). இவர் அந்த பகுதியில் 30 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
நகராட்சிக்கு உட்பட்ட பாகம் எண் 181, வரிசை எண்.446–ல் வாக்காளர் பட்டியலில் மோகனின் பெயர் இடம் பெற்று இருந்தது. ஆனால் சமீபத்தில் வெளியான வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இல்லை. இறந்தவர் பெயர் பட்டியலில் மோகன் பெயர் இருந்துள்ளது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மோகன் தேர்தல் அதிகாரிக்கு புகார் மனு அனுப்பி இருக்கிறார்.
அதில் எந்த பதிலும் வராததால் தற்போது காஞ்சிபுரம் மாவட்ட தகவல் ஆணையருக்கு விளக்கம் கேட்டு மனு அனுப்பி உள்ளார்.
Next Story






