என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடர் மழை: மானாமதுரையில்  விவசாய பணிகள் மும்முரம்
    X

    தொடர் மழை: மானாமதுரையில் விவசாய பணிகள் மும்முரம்

    மானாமதுரை பகுதியில் தொடர் மழையால் விவசாய பணிகள் மும்முரம் அடைந்துள்ளன.

    மானாமதுரை:

    கடந்த 16–ந்தேதியில் இருந்து தமிழகம் முழுவதும் தொடர் மழை 2 நாட்கள் பெய்தது. அதை தொடர்ந்து வெயிலும் கொளுத்தியது. மீண்டும் கடந்த 3 நாட்களாக சூறாவளி காற்றுடன் மானாமதுரை பகுதியில் 1 மணி நேரம் விட்டு விட்டு மழை பெய்தது. திடீர் சூறாவளி காற்றால் மேலப்பசலை, மேலநெட்டூர், குறிச்சி, செய்களத்தூர், கள்ளர்வலசை ஆகிய பகுதியில் ஏராளமான வாழை மரங்கள் சாய்ந்தது.

    திடீர் மழையால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் தற்போது விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மானாமதுரை அருகே உள்ள அன்னியேந்தல், முத்தனேந்தல், மேட்டுமடை, பெரும்பச்சேரி, கொம்புக் காரனேந்தல், கட்டிகுளம், முல்லைகுளம், குவளை வெளி பகுதியில் விவசாய பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    மழை நீடிக்கும் என்பதால் நிலங்களை உழுதும் தயார் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×