என் மலர்
செய்திகள்

வேதாரண்யம் அருகே புழுதி மணல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல்
வேதாரண்யம் அருகே புழுதி மணல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல் செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் வேதாரண்யம் கருப்பம்புலம் பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டணர். அப்போது கருப்பம்புலம் கிராமத்தில் புழுதி மணல் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்தி விசாரணை நடத்தினர்.
அவர்களிடம் மணல் ஏற்றுவதற்கு எந்தவித அனுமதியும் ஆவணமும் இல்லை. இதனால் அந்த டிராக்டரை பறிமுதல் செய்து வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்துவிட்டு இது சம்மந்தமான புகாரை நாகப்பட்டினம் வருவாய் கோட்டாசியருக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story






