என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைத்தீஸ்வரன் கோவிலில் மகன் திருமணத்துக்கு ஜாதகம் பார்க்க வந்தவர் மர்ம சாவு: போலீசார் விசாரணை
    X

    வைத்தீஸ்வரன் கோவிலில் மகன் திருமணத்துக்கு ஜாதகம் பார்க்க வந்தவர் மர்ம சாவு: போலீசார் விசாரணை

    சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் மகனுக்கு ஜாதகம் பார்க்க வந்த தந்தை மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    சீர்காழி:

    சென்னை திருவொற்றியூர் கனகர் தெருவை சேர்ந்தவர் சேகர் (59). இவரது மனைவி அனுசியாபாய். இவர்களது மகன் விக்னேஷ். இவரின் திருமணத்துக்காக கடந்த 28-ம் தேதி வைத்தீஸ்வரன் கோவில் சன்னதிதெருவில் உள்ள ஒரு ஜோதிடரிடம் சேகர் ஜாதகம் பார்த்தார். பின்னர் அங்குள்ள ஒரு விடுதி அறையில் தங்கினார். நேற்று காலை அந்த அறையிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ் நிலையத்துக்கு காவலாளி சுப்பிரமணியன் தகவல் தெரிவித்தார்.

    இன்ஸ்பெக்டர் அழகுதுரை, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தவபாண்டி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சேகர் இறந்து கிடந்தார்.

    அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சேகர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் இறந்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×