என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூர்-திருமானூர் பகுதிகளில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அரசு கொறடா மாலை அணிவித்து மரியாதை
    X

    அரியலூர்-திருமானூர் பகுதிகளில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அரசு கொறடா மாலை அணிவித்து மரியாதை

    அரியலூர் மற்றும் திருமானூர் பகுதிகளில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. மரியாதை செலுத்தினார்.
    அரியலூர்:

    அரியலூர் தொகுதி சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாவட்ட செயலாளரும், தமிழக அரசு தலைமை கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. அரியலூர் காமராஜர் திடலில் இருந்து திறந்த வாகனத்தில் கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக திருச்சி ரோடு, சத்திரம் வழியாக வந்து வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து இனிப்புகள் வழங்கினார்.

    பின்னர் அரியலூர் பஸ்நிலையம் அருகேயுள்ள அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி, முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகன், ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் சங்கர், நகர செயலாளர் கண்ணன் உள்ளிட்ட அனைத்து அணி பொறுப்பாளர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

    திருமானூர் பகுதியில்...இதே போல் திருமானூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பிருந்து ஒன்றிய கழக செயலாளர் குமரவேல் தலைமையில் தொகுதி கழக செயலாளர் சேட்டு ராஜேந்திரன், மாவட்ட அவைத்தலைவர் கணேசன் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் முன்னிலையில் அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ தொண்டர்களுடன் திருமானூர் கடைவீதி வழியாக ஊர்வலமாக வந்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து தாமரை ராஜேந்திரன் பேசுகையில், தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் எத்தனை கட்சிகள் எதிர்த்து நின்றாலும், தனித்து நின்று மக்களோடு கூட்டணி வைத்து தனிப்பெரும்பான்மையுடன் அ.தி.மு.க வெற்றி பெற்றிருக்கிறது.

    மேலும் அரியலூர் தொகுதி மேம்பாட்டிற்காக நான் கடுமையாக உழைப்பேன். எனக்கு வாக்களித்து அரியலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்த மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய பிரிவு சாமிநாதன், திருவாசகமணி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் சரவன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப  பிரிவு செயலாளர்  சாமிநாதன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அக்பர்ஷெரிப், மாவட்ட பிரதிநிதி தங்க.தென்னரசு, ஒன்றிய மாணவரணி செயலாளர் பாவேந்தன், முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் துரை.அலெக்சாண்டர், உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, கிளை, ஊராட்சி மற்றும் அணி பொறுப்பாளர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    Next Story
    ×