என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஷவாயு தாக்கி 2 பேர் பலி: என்.எல்.சி. தொழில்நுட்ப பணியாளர்கள் 2 பேர் சஸ்பெண்டு
    X

    விஷவாயு தாக்கி 2 பேர் பலி: என்.எல்.சி. தொழில்நுட்ப பணியாளர்கள் 2 பேர் சஸ்பெண்டு

    கடலூர் மாவட்டத்தில் விஷவாயு தாக்கி 2 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    நெய்வேலி:

    நெய்வேலி வட்டம் 15 மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரின் குடியிருப்பு பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டது. என்.எல்.சி. குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரியத்தை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் இதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது தொழிலாளர்கள் தங்கராசு, சின்னதுரை ஆகியோர் விஷவாயு தாக்கி பலியானார்கள். இச்சம்பவம் தொடர்பாக வட்டம் 22 குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரிந்து வரும் தொழில்நுட்ப பணியாளர்களான முரளி கிருஷ்ணன், நீதிமணி ஆகிய 2 பேரையும் சஸ்பெண்டு செய்து என்.எல்.சி. நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
    Next Story
    ×