என் மலர்
செய்திகள்

கடலூரில் மத்திய சிறையை முற்றுகையிட முயற்சி: 52 பேர் கைது
கடலூர் மாவட்டத்தில் மத்திய சிறையை முற்றுகையிட முயன்ற 52 பேரை போலீசார் கைது.
கடலூர்:
கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இந்திய தேசிய லீக் கட்சியின் கடலூர் மாவட்ட தலைவர் ஸ்டார் சவுகத் அலி தலைமையில் 52 பேர் கார், வேன்களில் கடலூர் மத்திய சிறைச்சாலை அருகே வந்தனர்.
பின்னர், தமிழக சிறைகளில் கடந்த 19 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள முஸ்லிம் கைதிகளை சிறை மாற்றம் செய்து அவர்களை சித்ரவதை செய்வதை கண்டித்தும், முஸ்லிம் கைதிகளுக்கு பரோல் வழங்க வேண்டும், மதுரை ராஜா உசேனை தனி சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தும் சிறை அதிகாரிகளை கண்டித்து கோஷமிட்டனர்.
பின்னர் அவர்கள் சிறைச்சாலையை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக செல்ல முயன்றனர்.
அப்போது பாதுகாப்புக்காக நின்ற துணை போலீஸ் சூப்பிரண்டு நரசிம்மன் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து ஸ்டார் சவுகத் அலி உள்பட 52 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் முதுநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

Next Story