என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
    X

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் வருகிற 1-ந் தேதி முதல்அரசு விடுமுறை நாட்கள் மற்றும் வாரத்தின் முதல்நாள் திங்கட்கிழமை தவிர்த்து இதர நாட்களில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் வட்டங்களிலும் வருவாய் துறை அலுவலர்களால் வருகிற 1-ந் தேதி முதல்அரசு விடுமுறை நாட்கள் மற்றும் வாரத்தின் முதல்நாள் திங்கட்கிழமை தவிர்த்து இதர நாட்களில்  மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.

    மாவட்டத்தில் ஜமாபந்தி நடைபெறும் இடங்கள், மற்றும் நாட்கள் குறித்த விவரம் வருமாறு:-

    வாலாஜாபாத் - 1-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை.

    காஞ்சீபுரம்- 1-ந்  தேதி முதல் 14-ந்  தேதி வரை.

    ஸ்ரீபெரும்புதூர்- 1ம் தேதி முதல் 14-ந்  தேதிவரை.

    செங்கல்பட்டு - 1-ந்  தேதி முதல் 8-ந்  தேதிவரை.

    ஆலந்தூர் - 1 மற்றும் 2-ந்  தேதி.

    மதுராந்தகம் - 1-ந்  தேதிமுதல் 17-ந்  தேதி.

    சோழிங்கநல்லூர் - 1 மற்றும் 2-ந்  தேதி.

    பல்லாவரம் - 1-ந்  தேதி முதல் 3-ந்  தேதி வரை.

    தாம்பரம் - 1 மற்றும் 2-ந் தேதி.

    திருப்போரூர் - 1-ந்  தேதி முதல் 10-ந்  தேதிவரை.

    திருக்கழுக்குன்றம் - 1-ந் தேதி முதல் 14-ந் தேதிவரை.

    உத்திரமேரூர் - 1-ந்  தேதி முதல் 14-ந் தேதிவரை.

    செய்யூர் - 1-ந்  தேதி முதல் 16-ந்  தேதிவரை.

    இதில் பொதுமக்கள் பட்டா மாற்றுதல், மற்றும் இதர குறைகள் குறித்த மனுக்களை அளிக்கலாம்.
    Next Story
    ×