என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண்ருட்டி அருகே விளைநிலங்களில் புகுந்து காட்டுபன்றிகள் அட்டகாசம்: விவசாயிகள் கவலை
    X

    பண்ருட்டி அருகே விளைநிலங்களில் புகுந்து காட்டுபன்றிகள் அட்டகாசம்: விவசாயிகள் கவலை

    பண்ருட்டி அருகே விளைநிலங்களில் புகுந்த காட்டுபன்றிகள் அட்டகாசத்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே உள்ள நல்லூர்பாளையம் கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான காடுகள் உள்ளன. மேலும் அந்த காடுகள் அருகே அதே கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமான விவசாய நிலங்கள் உள்ளன. அதில் மக்காச்சோளம், நெல்பயிர்கள் உள்ளிட்ட தானியங்கள் பயிரிடப்பட்டுள்ளன.

    இந்நிலையில் நேற்று இரவு அங்கு வந்த காட்டுபன்றிகள் விவசாயிகள் பயிரிட்டிருந்த தானியங்களை தின்று நாசம் செய்தன. இன்று காலை தோட்டத்திற்கு சென்ற விவசாயிகள் நெற்பயிர்கள் காட்டுபன்றிகளால் நாசம் அடைந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் காட்டுபன்றிகளை விவசாய நிலப்பகுதிக்கு வராமல் தடுக்க தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். என வனத்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×