என் மலர்tooltip icon

    செய்திகள்

    கெடிலம் ஆற்றில் மீன்கள் செத்து மிதந்தது ஏன்?: கலெக்டர் சுரேஷ்குமார் விளக்கம்
    X

    கெடிலம் ஆற்றில் மீன்கள் செத்து மிதந்தது ஏன்?: கலெக்டர் சுரேஷ்குமார் விளக்கம்

    கெடிலம் ஆற்றில் மீன்கள் செத்து மிதந்தது ஏன்? என்று கலெக்டர் சுரேஷ்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

    கடலூர் கம்மியம்பேட்டை பாலம் அருகில் கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் மீன்கள் இறந்து கிடப்பது தொடர்பாக மேல்நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    ஆய்வின்போது கம்மியம் பேட்டை தடுப்பணையில் நீர் பாசி படர்ந்து பச்சை நிறமாக மாறியது கண்டறியப்பட்டது. மேலும் சமீபத்தில் பொழிந்த கனமழையின் காரணமாக கெடிலம் ஆற்றின் மேல் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆற்றில் கலந்ததனாலும், தடுப்பணையில் உள்ள நீர் கலங்கியதாலும் நீரில் உள்ள ஆக்சிஜன் அளவு குறைந்து மீன்கள் இறக்க காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    மேலும், கெடிலம் ஆற்றின் அருகில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் இருந்து எவ்வித கழிவுநீரும் ஆற்றில் கலக்காதவாறு தொழிற்சாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    எனவே மக்கள் அச்சம் அடைய வேண்டாம். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
    Next Story
    ×