என் மலர்
செய்திகள்

பரதநாட்டிய கலைஞரிடம் ரூ.25 ஆயிரம் வைர நகை திருட்டு - பெண் கைது
சிதம்பரம் நடராஜர் கோவிலில் பரதநாட்டிய கலைஞரிடம் ரூ.25 ஆயிரம் வைர நகை திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிதம்பரம்:
சென்னை கிழக்கு பூங்கா சாலையை சேர்ந்தவர் கிமஜாராம்சரண். பரதநாட்டிய கலைஞர். இவர் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி கும்பிட வந்தார்.
அப்போது அவர் ஒரு கைப்பையில் வைர நகைகளை வைத்திருந்தார். இதனை நோட்டமிட்ட ஒரு பெண், அந்த பையை நைசாக திருடிக்கொண்டு ஓடிவிட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் சிதம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் கிமஜாராம்சரணிடம் இருந்து வைர நகைகளை திருடிச்சென்றது சிதம்பரம் குமரன் தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி இந்திரகுமாரி (வயது 30) என்பது தெரிய வந்தது. இதையடுத்து இந்திர குமாரியை போலீசார் கைது செய்தனர்.

Next Story