என் மலர்
செய்திகள்

நெய்வேலியில் விஷ வாயு தாக்கி 2 தொழிலாளிகள் பலி
மத்திய தொழிலக பாதுகாப்பு படை குடியிருப்பு பகுதியில் உள்ள சாக்கடையில் ஏற்பட்டிருந்த அடைப்பை சரி செய்ய சாக்கடைக்குள் இறங்கிய 2 தொழிலாளிகள் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர்.
நெய்வேலி:
கடலூர் மாவட்டம் நெய்வேலி புதுநகர் பகுதியை சேர்ந்தவர்கள் தங்கராசு (வயது 44), சின்னத்துரை (36). இவர்கள் இருவரும் என்.எல்.சி. ஒப்பந்த துப்புரவு தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்தனர்.
இன்று காலை வழக்கம்போல் அவர்கள் 2 பேரும் வேலைக்கு சென்றனர். 15-வது வட்டத்தில் அமைந்துள்ள மத்திய தொழிலக பாதுகாப்பு படை குடியிருப்பு பகுதியில் உள்ள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டிருந்ததை சரி செய்ய இருவரும் சாக்கடைக்குள் இறங்கினர்.
அப்போது திடீரென அவர்கள் 2 பேரையும் விஷ வாயு தாக்கியது. இதில் இருவரும் மயங்கினர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து தங்கராசையும், சின்னத்துரையையும் மீட்டனர்.
என்.எல்.சி. பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர்கள் 2 பேரையும் சேர்த்தனர். அங்கு தங்கராசும், சின்னத்துரையும் பரிதாபமாக இறந்தனர்.
இது குறித்து நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சாக்கடையை தூர் வாரிய போது விஷவாயு தாக்கி 2 துப்புரவு தொழிலாளிகள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story