என் மலர்tooltip icon

    செய்திகள்

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு: மாநில அளவில் 3–ம் இடம் பிடித்து கடலூர் மாணவிகள் சாதனை
    X

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு: மாநில அளவில் 3–ம் இடம் பிடித்து கடலூர் மாணவிகள் சாதனை

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் மாநில அளவில் 3–ம் இடம் பிடித்து கடலூர் மாவட்ட மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
    கடலூர்:

    எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவு இன்று வெளியானது. இந்த தேர்வில் கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த அருண்விக்னேஷ் 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3–ம் இடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பிடித்தார்.

    சிதம்பரம் காமராஜ் மெட்ரிக்பள்ளியைச் சேர்ந்த மிதுவர்ஷினி 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3–ம் இடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பிடித்தார்.

    கடலூர் செயின்மேரிஸ் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த சொர்ணாமரிம் 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3–ம் இடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பிடித்தார்.

    கடலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு இந்த ஆண்டு 37,795 பேர் தேர்வு எழுதினர். இதில் 33,687 தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 89.13 சதவீதம் ஆகும். இது கடந்த ஆண்டை விட 2.48 சதவீதம் கூடுதல் ஆகும். இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் கடலூர் மாவட்டம் 28–வது இடம் பிடித்துள்ளது.
    Next Story
    ×