என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரைக்குடியில் நகைக்கடையில் புகுந்து 10 பவுன் நகை திருட்டு
    X

    காரைக்குடியில் நகைக்கடையில் புகுந்து 10 பவுன் நகை திருட்டு

    காரைக்குடியில் நகைக் கடையில் 10 பவுன் நகையை திருடிச்சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி மேல ஊரணி வாய்க்கால் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன் (வயது65). இவர் காரைக்குடி அம்மன் சன்னதியில் நகைக்கடை வைத்துள்ளார். நேற்று இரவு இவரது கடையில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி நகை வாங்கப் போவதாக கூறி உள்ளார்.

    இதையடுத்து லட்சுமணனும் நகைகளை எடுத்து காண்பித்துள்ளார். அப்போது மர்ம ஆசாமி நகைகள் எதுவும் பிடிக்கவில்லை. வேறு மாடல்கள் இருந்தால் கொண்டு வாருங்கள் என்று கூறி உள்ளார். லட்சுமணனும் நகையை எடுக்க சென்றார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட மர்ம ஆசாமி அங்கிருந்த 5 பவுன் கொண்ட தலா 2 செயின்களை திருடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பினார்.

    இதுகுறித்து லட்சுமணன் கொடுத்த புகாரின்பேரில் காரைக்குடி தெற்கு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகிறார்.
    Next Story
    ×