என் மலர்tooltip icon

    செய்திகள்

    துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 2 கிலோ தங்கம் கடத்திய கேரள வாலிபர் கைது
    X

    துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 2 கிலோ தங்கம் கடத்திய கேரள வாலிபர் கைது

    துபாயில் இருந்து சென்னைக்கு எமர்ஜென்சி விளக்கில் 2 கிலோ தங்கத்தை கடத்திய கேரள வாலிபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு இன்று அதிகாலை பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த அன்வர்சாதிக்கிடம் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பேசினார். சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர் வாங்கி வந்த 2 ‘எமர்ஜென்சி’ விளக்கை உடைத்து சோதனை செய்தனர்.

    அதில் 2 கிலோ தங்க கட்டிகள் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ. 60 லட்சம் ஆகும்.

    இதையடுத்து தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அன்வர் சாதிக்கிடம் விசாரணை நடந்து வருகிறது.

    குவைத்தில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த ஆந்திராவைச் சேர்ந்த உஷாராணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது அவர் உள்ளாடையில் மறைத்து 700 கிராம் தங்கம் கடத்தி வந்த தெரிந்தது. இதன் மதிப்பு ரூ. 20 லட்சம்.

    தங்கத்தை பறிமுதல் செய்து உஷாராணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×