என் மலர்
செய்திகள்

தாம்பரத்தில் வியாபாரியின் மொபட்பெட்டியை உடைத்து ரூ.1 லட்சம் கொள்ளை
தாம்பரத்தில் வியாபாரியின் மொபட் பெட்டியை உடைத்து ரூ.1 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம்:
மேற்கு தாம்பரம், கஸ்தூரிபாய் நகர் சிங்காரம் தெருவை சேர்ந்தவர் சூரியன். தாம்பரம் மார்க்கெட்டில் மளிகை கடை வைத்து உள்ளார்.
இவர் தாம்பரம் மேம்பாலம் அருகே உள்ள வங்கியில் ரூ.1 லட்சத்தை எடுத்தார். பின்னர் பணத்தை மொபட் இருக்கையின் கீழ் வைத்து வந்து கொண்டு இருந்தார். தாம்பரம் தர்காஸ் சாலையில் உள்ள பிரியாணி கடைக்கு செல்ல வண்டியை நிறுத்தி சென்றார். பின்னர் வீட்டுக்கு வந்து மொபட்டை திறந்த போது பணத்தை காணவில்லை. பிரியாணி கடை முன்பு மொபட்டை நிறுத்தி இருந்த போது பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் மொபட்பெட்டியை உடைத்து ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
இது குறித்து தாம்பரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story