என் மலர்tooltip icon

    செய்திகள்

    என்.எல்.சி. ஊழியர்களுக்கு சம்பள உயர்வு
    X

    என்.எல்.சி. ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

    ஊதிய உயர்வு பெறும் என்.எல்.சி. ஒப்பந்த ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    நெய்வேலி:

    என்.எல்.சி.யில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறார்கள்.

    இவர்கள் தங்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் பஞ்சப்படி உயர்த்தி வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, 2016–17–ம் ஆண்டிற்கு புதிய பஞ்சப்படியாக ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.39.40 உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதாக என்.எல்.சி. நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த தொகை 1–4–2016 அன்று முதல் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இது குறித்து ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க செயலாளர் வெங்கடேசன் கூறுகையில், என்.எல்.சி. நிர்வாகம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நடப்பு ஆண்டு பஞ்சப்படி ரூ.39.40 உயர்த்தியுள்ளது.

    இந்த தொகை ஏப்ரல் 1–ந் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது என்றார்.

    இதனால் ஊதிய உயர்வு பெறும் ஒப்பந்த தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    Next Story
    ×