என் மலர்
செய்திகள்

காரைக்குடியில் காதல் பிரச்சினையில் வாலிபருக்கு கத்திக்குத்து: 4 கல்லூரி மாணவர்கள் கைது
காரைக்குடி:
காரைக்குடி சுப்பிரமணிய புரத்தைச் சேர்ந்தவர் சிங்கதுரை. இவரது மகன் அருண் பாண்டியன் (வயது19). இவரது நண்பர் சுந்தர், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
சுந்தர் காதலித்த பெண்ணையே, அதே பகுதியை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் மணிகண்டன் (21) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் திருச்சியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார். காதல் பிரச்சினையில் சுந்தருக்கும், மணிகண்டனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது ஆத்திரம் அடைந்த மணிகண்டன், தனது நண்பர்கள் பிரவீன் (21), கைலாஷ்குமார் (21), பாலசுரேசன் (19) ஆகியோரை அழைத்துக்கொண்டு சுந்தரை தாக்க சென்றார்.
அப்போது சுந்தர் இல்லாததால் சம்பவ இடம் வந்த அவரது நண்பர் அருண்பாண்டியனை மணிகண்டன் உள்பட 4 பேரும் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் காரைக்குடி வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், கல்லூரி மாணவர்களான பிரவீன், கைலாஷ்குமார், பாலசுரேசன் ஆகிய 4 பேரை கைது செய்தார்.






