என் மலர்
செய்திகள்

சேலையூரில் என்ஜினீயர் வீட்டில் நகை–பணம் கொள்ளை
சேலையூரில் என்ஜினீயர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாம்பரம்:
சேலையூரை அடுத்த ராஜ கீழ்ப்பாக்கம், கிரி அவென்யூவில் வசித்து வருபவர் மீனாட்சிசுந்தரம், தாம்பரத்தில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 19-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் மதுரைக்கு சென்றார். பின்னர் இன்று காலை திரும்பி வந்தார்.
அப்போது வீட்டின் கதவு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 12 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் கொள்ளை போய் இருந்தது.
மீனாட்சிசுந்தரம் வெளியூர் சென்று இருப்பதை நோட்டமிட்டு மர்ம கும்பல் கைவரிசை காட்டி உள்ளனர். இதில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.
இதுகுறித்து சேலையூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story