என் மலர்tooltip icon

    செய்திகள்

    அந்தமானில் பலத்த மழை: 178 பயணிகளுடன் சென்ற சென்னை விமானம் திருப்பி அனுப்பப்பட்டது
    X

    அந்தமானில் பலத்த மழை: 178 பயணிகளுடன் சென்ற சென்னை விமானம் திருப்பி அனுப்பப்பட்டது

    அந்தமானில் பலத்த மழை பெய்ததால், 178 பயணிகளுடன் சென்ற சென்னை விமானம் நேற்று தரை இறங்க முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டது.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்தில் இருந்து 178 பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று மாலை விமானம் ஒன்று அந்தமானுக்கு புறப்பட்டு சென்றது.

    அந்தமானை சென்றடைந்ததும் விமானம் தரை இறங்க முயன்றது. ஆனால் அங்கு பலத்த மழை பெய்ததால், விமானம் தரை இறங்க முடியவில்லை. இதனையடுத்து விமானத்தை தரை இறக்க அந்தமான் விமான நிலைய அதிகாரிகள் அனுமதி மறுத்தனர்.

    இதனால் அந்தமானில் இருந்து சென்னைக்கு விமானம் திருப்பி அனுப்பப்பட்டது. சென்னைக்கு நேற்று விமானம் வந்ததும், அதில் இருந்த பயணிகள் அனைவரும் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    அவர்கள் அனைவரும் இன்று விமானம் மூலமாக அந்தமானுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இதனால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.
    Next Story
    ×