என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாசரேத் அருகே கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு
    X

    நாசரேத் அருகே கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு

    நாசரேத் அருகே கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் 8 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம ஆசாமி.
    நாசரேத்:

    நாசரேத் அருகே உள்ள கச்சனாவிளை கீழத்தெருவைச் சேர்ந்தவர் சுந்தர் (வயது 50). இவர் கோவையில் ஒரு மளிகை கடையில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி பூபதி (45). இவர்களுக்கு ஓரு மகன், 2 மகள்கள் உள்ளனர். இவர்களது மகள் லெட்சுமிக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று இரவு பூபதி  வீட்டில் தூங்கிகொண்டிருந்தார். அப்போது அதிகாலை 1.30 மணியளவில் வீட்டின் ஓட்டைப் பிரித்து மர்ம ஆசாமி உள்ளே புகுந்து கத்தியை காட்டி மிரட்டி லெட்சுமி அணிந்திருந்த 8 பவுன் நகையை பறித்து சென்றான். வீட்டில் இருந்த செல்போனையும் திருடி சென்றான். அவற்றின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

    இதுகுறித்து பூபதி நாசரேத் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருணாசலம் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் பால்ராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×