என் மலர்
செய்திகள்

தஞ்சை, அரவக்குறிச்சியில் நாளை பொதுவிடுமுறை ரத்து
தஞ்சாவூர், அரவக்குறிச்சியில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதால் நாளை பொது விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர், அரவக்குறிச்சியில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதால் நாளை பொது விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசு முதன்மை செயலாளர் கே.ஞானதேசிகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:–
தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதி சட்டபேரவை தேர்தல் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுவதாக இருந்தது. தற்போது இத் தேர்தல் ஜூன் 13–ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே இரு தொகுதிகளில் நாளை பொது விடுமுறை என அறிவிக்கப்பட்டது ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
Next Story