என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்லாவரம் அருகே தொழில் அதிபர் வீட்டில் 21 பவுன் நகை–பணம் கொள்ளை
    X

    பல்லாவரம் அருகே தொழில் அதிபர் வீட்டில் 21 பவுன் நகை–பணம் கொள்ளை

    பல்லாவரத்தில் தொழில் அதிபர் வீட்டில் கள்ளச்சாவி மூலம் கதவை திறந்து 21 பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
    தாம்பரம்:

    பல்லாவரம் பெரிய பாளையத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நசிர் அகமது. லெதர் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

    கடந்த 16–ந்தேதி குடும்பத்துடன் திண்டுக்கல்லில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். நேற்று மாலை வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்கு உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 21 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது.

    இதுகுறித்து பல்லாவரம் போலீசில் நசிர்அகமது புகார் செய்தார். மர்ம நபர்கள் கள்ளச்சாவி மூலம் வீடு கதவை திறந்து கைவரிசை காட்டியுள்ளனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.
    Next Story
    ×