என் மலர்
செய்திகள்

கார்-வேன் மோதல்: விராலிமலை தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் உயிர் தப்பினார்
கார்-வேன் மோதலில் விராலிமலை தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் கார்த்திக்கேயன் உயிர் தப்பினார்.
விராலிமலை:
விராலிமலை சட்டமன்ற தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் கார்த்திக்கேயன் போட்டியிடுகிறார். நேற்று இவர் திருச்சியில் நடைபெற்ற தே.மு.தி.க. , மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா. வெற்றி மாநாட்டில் பங்கேற்பதற்காக மாலை 6மணிக்கு விராலிமலையில் இருந்து திருச்சிக்கு காரில் புறப்பட்டார். காரை தேராவூரை சேர்ந்த ராஜேந்திரன் ஓட்டினார்.
திருச்சி - மதுரை 4 வழிச்சாலையில் தனியார் கம்பெனி அருகே செல்லும் போது திடீரென ராஜேந்திரன் ஷடர்ன் பிரேக் போட்டு காரை நிறுத்தினார். அப்போது பின்னால் குற்றாலத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த வேன் காரின் பின்புறம் மோதியது. இதில் காரின் பின்புறம் பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் வேட்பாளர் கார்த்திக்கேயன், டிரைவர் ராஜேந்திரன் மற்றும் காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
வேனில் இருந்தவர்களும் எந்தவித காயமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story