என் மலர்
செய்திகள்

அ.தி.மு.க. தி.மு.க.விடம் இருந்து மக்களுக்கு விடுதலை வாங்கி தரவே இங்கு வந்து இருக்கிறேன்: பிரதமர் மோடி பேச்சு
அ.தி.மு.க. தி.மு.க.விடம் இருந்து மக்களுக்கு விடுதலை வாங்கி தரவே இங்கு வந்து இருக்கிறேன் என வேதாரண்யத்தில் பிரதமர் மோடி பேசினார்.
வேதாரண்யம்:
தமிழக சட்டசபைக்கு வருகிற 16-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால் பிரசாரம் களை கட்டி உள்ளது. தமிழக தலைவர்கள் தங்கள் கட்சி, கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். தேசிய தலைவர்களும் தமிழ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி 3 நாள் பிரசாரமாக இன்று மாலை நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தேத்தாக்குடி தெற்கு கன்னித்தோப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களை சேர்ந்த 18 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜனதா, ஐ.ஜே.கே. வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.
அப்போது கூறியதாவது:-
இந்தியா விடுதலையாகி சுமார் 70 வருடங்கள் ஆகிறது. இந்த 70 வருடங்களில் வேதராண்யத்திற்கு வந்த முதல் பிரதமர் நான்தான். இங்குள்ள மக்களின் உற்சாகத்தை பார்க்கும்போது அவர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அவர்கள் என்னையும், இங்கு பா.ஜனதா கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களையும் ஆசிர்வதிக்க வந்துள்ளார்கள்.
தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து தேர்தலை சந்தித்து வருகிறார்கள். அ.தி.மு.க., தி.மு.க. என்ற இரண்டு கட்கிளுக்குத்தான் மாற்றி மாற்றி ஓட்டு போட்டுள்ளீர்கள். அவர்களிடம் இருந்து மக்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுக்கத்தான் இங்கே வந்திருக்கிறேன்.
பாரதம் முழுவதும் பா.ஜனதா அரசு இருந்து வருகிறது. எங்களிடன் ஒரே எண்ணம் வளர்ச்சி என்பது ஒன்று மட்டும்தான். எங்களின் எண்ணம் விவசாயிகள் வளர்சசி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, நல்ல சாலை, நல்ல மருத்துவமனை ஆகியவற்றை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்பதுதான் பா.ஜனதா அரசின் எண்ணம்.
ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். அதற்கு நீங்கள் பதில் சொல்வீர்களா? என்று கேட்ட மோடி, ‘‘நீங்கள் சொல்லுங்கள், உங்களது வீடு, கடைகள், மருத்துவமனைகள், கல்விக்கூடம் எதிலாவது 24 மணி நேரம் மின்சாரம் வருதா? என்று கேட்டார்.’’
பா. ஜனதா ஆளும் மாநிலங்களில் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கிறது. ஆனால் தமிழகத்தில் அப்படி இல்லை. உங்களுக்கு சுத்தமான தண்ணீர் கிடைக்கிறதா?. அதுவும் இல்லை.
உங்களிடம் வளர்ச்சிக்காக வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். இங்கு வசிக்கும் மக்கள் பெரிய பெரிய வண்டி கேட்கவில்லை. ஆடம்பரம் கேட்கவில்லை. நல்ல வீடு, சுத்தமான குடிநீர் மின்சாரம், தரமான பள்ளிக்கூடம், நல்ல மருந்து இதுதான் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
மீனவர்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். என் தொகுதி மீனவர்களுக்கு இ-போட் ஏற்பாடு செய்துள்ளேன். இது சூரிய ஒளியில் ஓடும் படகாகும். இதன்மூலம் எனது தொகுதி மீனவர்கள் ஒரு நாளைக்கு ரூ. 500 மதிப்பிலான டீசலை மிச்சம் பிடிக்கிறார்கள்..
இன்றைக்கு ஏழை மீனவர்களாக இருக்கட்டும், காய்கறி வியாபரிகளாக இருக்கட்டும், வியாபாரிகளாக இருக்கட்டும். இவர்களுக்கு வங்கிகள் லோன் கொடுக்குமா?. ஆனால், பா.ஜனதா தலைமையிலான அரசு கொண்டுவந்துள்ள முத்ரா வங்கி தி்ட்டம் ஏழைகளுக்கு கடன் வழங்குகிறது. 3 கோடி பேருக்கு 25 லட்சம் வரை கடன் பெற எனது அரசு செய்திருக்கிறது.
இலங்கையில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட ஐந்துபேர் விடுதலைக்கு என்னுடைய முழு முயற்சிதான் காரணம் என்று கூறிய மோடி, தமிழகத்தில் ஊழல் அதிகமாகிவிட்டது. ஊழல் உள்ள மாநிலம் வளர்ச்சி பெற முடியாது என்றார்.

Next Story