என் மலர்
செய்திகள்

தர்மபுரியில் ராணுவ வீரர்கள் அணிவகுப்பு
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக 3 கம்பெனி துணை ராணுவத்தினர் கொல்கத்தாவில் இருந்து தர்மபுரிக்கு வந்தனர்.
தர்மபுரி
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக 3 கம்பெனி துணை ராணுவத்தினர் கொல்கத்தாவில் இருந்து தர்மபுரிக்கு வந்தனர். இவர்களில் தர்மபுரி சட்டசபை தொகுதியில் பாதுகாப்பு பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ராணுவ வீரர்கள் தர்மபுரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தர்மபுரி நகரின் முக்கிய வீதிகளில் அணிவகுப்பு நடத்தினார்கள். குமாரசாமிப்பேட்டையில் இருந்து தொடங்கிய அணிவகுப்பு பஸ்நிலையம், தொலைபேசி நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியாக நடந்தது.
இதில் ராணுவ வீரர்கள் துப்பாக்கிகளுடன் பங்கேற்றனர். இந்த அணிவகுப்பில் தர்மபுரி தேர்தல் நடத்தும் அலுவலர் ராமமூர்த்தி மற்றும் போலீஸ் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

Next Story