என் மலர்
செய்திகள்

எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் வினியோகம் தள்ளிவைப்பு
பிளஸ்-2 தேர்வு முடிவு 17-ந்தேதி வெளியாவதால் விண்ணப்பம் வழங்குவது தள்ளி வைக்கப்படுவதாக மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர். விமலா தெரிவித்துள்ளார்.
சென்னை:
எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு வருகிற 9-ந் தேதி முதல் விண்ணப்பம் வினியோகம் செய்யப்படும் என்று ஏற்கனவே மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் பிளஸ்-2 தேர்வு முடிவு தாமதமாக வருவதால் மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பம் வழங்குவதும் தாமதமாகிறது.
இதுகுறித்து மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர். விமலா கூறியதாவது:-
எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவ படிப்புக்கு 9-ந் தேதி முதல் விண்ணப்பம் வழங்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் பிளஸ்-2 தேர்வு முடிவு 17-ந் தேதி வெளியாவதால் விண்ணப்பம் வழங்குவது தள்ளி வைக்கப்படுகிறது. அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story