என் மலர்
செய்திகள்

மதுரை, கோவை, சென்னையில் ராகுல்காந்தி இன்று பிரசாரம்
தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி மதுரை, கோவை, சென்னையில் பிரசாரம் செய்கிறார்.
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரம் முடிவடைவதற்கு இன்னும் 7 நாட்களே இருப்பதால், வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டும் பணியில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நலக்கூட்டணி-தே.மு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. ஆகிய 5 கூட்டணி தலைவர்கள், வேட்பாளர்கள் வீடு, வீடாக சென்று ஓட்டு கேட்டு வருகிறார்கள்.
பிரதமர் நரேந்திரமோடி நேற்று சென்னை, ஓசூர் நகரங்களில் நடந்த பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். காங்கிரஸ் தலைவர் சோனியா நேற்று முன் தினம் சென்னையில் ஒரே மேடையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் பிரசாரம் செய்து தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
தலைவர்களின் முற்றுகை காரணமாக தமிழக தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது. இந்த வார இறுதியில் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டும்.
இந்த நிலையில் தமிழக தேர்தல் களத்தில் மேலும் விறுவிறுப்பை ஏற்படுத்தும் வகையில், தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று (சனிக்கிழமை) தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து மதியம் தனி விமானத்தில் புறப்படும் அவர் மாலை 3.30 மணிக்கு வந்து சேர உள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் ராகுலுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்படுகிறது. அதன்பிறகு அவர் காரில் மதுரை ஊமச்சிக்குளம் அருகே நத்தம் மெயின் ரோட்டில் யாதவ கல்லூரி அருகில் நடைபெறும் பிரசார கூட்ட அரங்குக்கு செல்கிறார்.
மாலை 4 மணிக்கு கூட்டம் தொடங்க உள்ளது. கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் தென்மாவட்ட தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் பேச உள்ளார்.
ராகுல்காந்தியுடன் இந்த பிரசார மேடையில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்க உள்ளார். இதையடுத்து மதுரை பிரசார பொதுக்கூட்டத்துக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சிறப்பு அதிரடிப்படை வீரர்களுடன் மதுரை பொதுக்கூட்ட மைதானத்தை சுற்றி சுமார் ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ராகுல் கூட்டத்துக்கு முன் பகுதிக்கு வந்த அனைவரும் மெட்டல் டிடெக்டர் மூலம் கடுமையாக பரிசோதிக்கப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.
மதுரையில் பொதுக்கூட்டத்தை முடித்த பிறகு ராகுல் அதே தனி விமானத்தில் கோவை புறப்பட்டு செல்கிறார். அவரது விமானம் கோவை விமான நிலையத்தை மாலை 6.15 மணிக்கு சென்று விடும்.
அங்கிருந்து ராகுல்காந்தியும் இளங்கோவனும் குண்டு துளைக்காத காரில் கோவை வ.உ.சி. மைதானத்துக்கு வருகிறார்கள். அங்கு 6.30 மணிக்கு பொதுக்கூட்டம் தொடங்குகிறது.
கூட்டத்தில் ராகுல்காந்தி கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மூன்று மாவட்ட தி.மு.க.-காங்கிரஸ் கூட் டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். ராகுல் சுமார் 30 நிமிடம் அங்கு பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி.யும் கலந்து கொண்டு ராகுலுடன் சேர்ந்து ஆதரவு திரட்ட உள்ளார். தலைவர்கள் வருகை காரணமாக கோவை வ.உ.சி. மைதானம் நேற்றே சிறப்பு பாதுகாப்புப் படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது தவிர மைதான பகுதியில் சுமார் 1000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோவையில் இன்று பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான மத்திய மந்திரி வெங்கையாநாயுடு பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேச உள்ளார். இதனால் கோவை முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவையில் ராகுல் பங்கேற்கும் கூட்டம் 7.15 மணிக்கு முடிகிறது. இரவு 7.30 மணிக்கு ராகுல் தனி விமானத்தில் சென்னை புறப்படுகிறார். இரவு 8.30 மணிக்கு ராகுல் சென்னை வந்து சேருவார். இரவு 8.45 மணிக்கு மதுரவாயல் கே.பி.என். திருமண மண்டபம் அருகில் உள்ள மைதானத்தில் நடக்கும் கூட்டத்தில் ராகுல் பேச உள்ளார்.
மதுரவாயல் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.ராஜேஷ் உள்பட தி.மு.க.- காங்கிரஸ் கூட் டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேச உள்ளார். இந்த கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன், தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார். கூட்டம் முடிந்ததும் தனி விமானத்தில் இன்றிரவே ராகுல் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

Next Story