என் மலர்
செய்திகள்

ஆவடி அருகே ரெயில் விபத்து - தண்டவாள சீரமைப்பு பணி தீவிரம்
ஆவடி அருகே மின்சார ரெயில் மீது மோதி எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது. இதில் சேதம் அடைந்த தண்டவாளத்தை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
ஆவடி :
ஆவடி அருகே மின்சார ரெயில் மீது மோதி எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது. இதில் சேதம் அடைந்த தண்டவாளத்தை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. இதன் காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
சென்னை சென்டிரலில் இருந்து நேற்று முன்தினம் இரவு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் புறநகர் மின்சார ரெயில் வந்து கொண்டிருந்தது. அந்த ரெயில் இரவு 8.15 மணிக்கு ஆவடியை அடுத்த இந்துக்கல்லூரி ரெயில் நிலையம் வந்து பட்டாபிராம் சைடிங் ரெயில் நிலையத்துக்கு புறப்பட்டது.
அந்த ரெயில் சைடிங் போவதற்காக எக்ஸ்பிரஸ் ரெயில் செல்லும் தண்டவாளத்தை கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த தண்டவாளத்தில் சென்னையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில், மின்சார ரெயிலின் பக்கவாட்டில் மோதியது.
இதில் எக்ஸ்பிரஸ் ரெயிலின் என்ஜின் உள்பட 3 பெட்டிகள் தடம் புரண்டன. எக்ஸ்பிரஸ் ரெயில் மோதிய வேகத்தில் புறநகர் மின்சார ரெயில் கொஞ்சம் சாய்ந்து நின்றது. மின்சார ரெயிலின் சில பெட்டிகளும் சேதம் அடைந்தன.
நல்ல வேளையாக எக்ஸ்பிரஸ் ரெயில் மெதுவாக வந்து மோதியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இந்த விபத்தில் திலகமணி (வயது 42), மணி (35), பொன்மொழியன் (45), அபிகித் நிகோ (42), ஆனந்தன் (46), சதீஷ் (30) ஆகிய 6 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் பெரம்பூர் ரெயில்வே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
பெரம்பூர் ரெயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அபிகித் நிகோ மற்றும் சதீஷ் ஆகிய 2 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரமும், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திலகமணி, ஆனந்தன் ஆகியோருக்கு தலா ரூ.5 ஆயிரமும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய மணி மற்றும் பொன்மொழியன் ஆகியோருக்கு தலா ரூ.5 ஆயிரமும் இழப்பீட்டுத் தொகையாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தெற்கு ரெயில்வே பொது மேலாளர் வசிஷ்டா ஜோஹ்ரி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் மின்சார ரெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
ரெயில்வே ஊழியர்கள் இரவு-பகலாக செயல்பட்டு எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் மற்றும் தடம் புரண்ட பெட்டிகளை ரெயில் தண்டவாளத்தில் நிறுத்தி ரெயிலை அப்புறப்படுத்தினர். மேலும் சேதம் அடைந்த ரெயில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் எக்ஸ்பிரஸ் ரெயில் செல்லும் தண்டவாளத்தில் ரெயில்கள் இயக்கப்படவில்லை. மின்சார ரெயில் சேவையிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டது. சென்னை-அரக்கோணம் இடையே 1 மணி நேரத்துக்கு ஒரு மின்சார ரெயில் மட்டும் இயக்கப்பட்டது.
அதே தண்டவாளத்தில் சில எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இயக்கப்பட்டன. மின்சார ரெயில் போக்குவரத்து மேலும் தாமதம் ஏற்பட்டது. இதனால் சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கும், புறநகரில் இருந்து சென்னைக்கும் வரும் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
இதனால் ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் தவித்தனர். சிலர் பஸ்கள் மூலம் சென்னைக்கு சென்றனர். இதனால் பஸ் நிலையங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
தண்டவாள சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிந்த பிறகுதான் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அந்த தண்டவாளத்தில் இயக்கப்படும். அதன்பிறகுதான் மின்சார ரெயில் போக்குவரத்தும் சீரடையும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தி விபத்தின் காரணமாக சென்னை சென்டிரலில் இருந்து நேற்று மைசூர், கோவை செல்லும் ரெயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

Next Story