என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமாவளவன் கார்–போலீஸ் ஜீப் மீது கல்வீசிய 6 பேர் கைது
    X

    திருமாவளவன் கார்–போலீஸ் ஜீப் மீது கல்வீசிய 6 பேர் கைது

    தேர்தல் பிரசாரத்தின்போது திருமாவளவன் கார்–போலீஸ் ஜீப் மீது கல்வீசிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவன் நேற்று ஸ்ரீமுஷ்ணம் அருகே கொழைச்சாவடிக்குப்பத்தில் தேர்தல் பிரசாரத்துக்கு காரில் சென்றார். அவருடன் கட்சி நிர்வாகிகளும், பாதுகாப்புக்காக போலீசாரும் உடன் சென்றனர். அதைத்தொடர்ந்து அவர் அங்கு பிரசாரத்தை முடித்துவிட்டு புளியங்குடி நோக்கி சென்ற போது, யாரோ மர்ம நபர்கள் திடீரென கல்வீசி தாக்கினர்.

    இதில் திருமாவளவன் வாகனத்துக்கு பின்னால் சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கார் மற்றும் போலீஸ் ஜீப் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது.

    இது பற்றி அறிந்ததும் திருமாவளவன் தனது காரை நிறுத்தி பார்வையிட்டார். கட்சி நிர்வாகிகளும் திரண்டனர். கட்சி நிர்வாகிகளை சமாதானப்படுத்திய திருமாவளவன் பிரசாரத்துக்காக புளியங்குடிக்கு சென்றார்.

    இந்த கல்வீச்சு சம்பவம் தொடர்பாக கொழைசாவடி குப்பத்தைச் சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×