என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயங்கொண்டம் அருகே தையல் பயிற்சி மாணவிகள் மாயம்
    X

    ஜெயங்கொண்டம் அருகே தையல் பயிற்சி மாணவிகள் மாயம்

    ஜெயங்கொண்டம் அருகே தையல் பயிற்சி மாணவிகள் மாயமானார்கள். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகிறார்கள்.

    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் வேலாயுதநகரில் தனியார் கன்னியர் இல்லம் உள்ளது. இங்கு சென்னையை சேர்ந்த கந்தன் மகள் வள்ளி (வயது17), ராதாகிருஷ்ணன் மகள் லதா (17) ஆகியோர் தங்கி, அங்கு தையல் பயிற்சி பெற்று வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 29–ந் தேதி தையல் பயிற்சிக்கு சென்ற இருவரும் அதன் பிறகு மாயமாகிவிட்டனர். அவர்களை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து இல்ல தாளாளர் மேரிவியான்னி ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    Next Story
    ×