என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு: 2 சிறுவர்கள் கைது
    X

    கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு: 2 சிறுவர்கள் கைது

    அரியலூர் மணியங்குட்டை பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் உண்டியலை உடைத்து 2 சிறுவர்கள் அதிலிருந்த ரூ.320-ஐ திருடி சென்றனர்.
    அரியலூர்:

    அரியலூர் மணியங்குட்டை பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த 26-ந்தேதி நள்ளிரவில் இந்த கோவிலின் உண்டியலை உடைத்து 2 சிறுவர்கள் அதிலிருந்த ரூ.320-ஐ திருடி சென்றனர். மறுநாள் காலை வழக்கம் போல் கோவிலை திறப்பதற்காக வந்த கோவில் நிர்வாகி மூர்த்தி இதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். 

    இது குறித்து அவர் அரியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.  சப்-இன்ஸ்பெக்டர் சின்னதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அரியலூரை சேர்ந்த 16 வயதுடைய 2 சிறுவர்கள் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுவர்களை கைது செய்தனர்.
    Next Story
    ×