என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண்ருட்டி அருகே முந்திரி வியாபாரியிடம் ரூ. 1 லட்சம் பறிமுதல்: தேர்தல் அதிகாரி அதிரடி நடவடிக்கை
    X

    பண்ருட்டி அருகே முந்திரி வியாபாரியிடம் ரூ. 1 லட்சம் பறிமுதல்: தேர்தல் அதிகாரி அதிரடி நடவடிக்கை

    பண்ருட்டி அருகே முந்திரி வியாபாரியிடம் ரூ. 1 லட்சம் பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே உள்ள செம்மங்குப்பம் பகுதியில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் ரவி சேகர் தலைமையில் இன்று காலை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தினார்கள். வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் மற்றும் பரிசு பொருட்கள் கடத்தப்படுகிறதா என்று கண்காணித்தனர்.

    அப்போது அந்த வழியாக அந்த பகுதியை சேர்ந்த முந்திரி வியாபாரி மாணிக்கவேல் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தார். அவரது வாகனத்தை வழிமடக்கி அதிகாரிகள் சோதனையிட்டனர் அவர் வைத்திருந்த பையில் ரூ. 1லட்சத்து 65 ஆயிரத்து 400 இருந்தது. அந்த பணத்தை கொண்டு செல்வதற்கு அவரிடம் எந்த விதமான ஆவணமும் இல்லை. எனவே அவரிடம் இருந்த பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்

    பின்னர் அந்த தொகையை பண்ருட்டி தேர்தல் நடத்தும் அலுவலர் மதியழகன் மற்றும் தாசில்தார் கீதா ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.வியாபாரி மாணிக்கவேல் பணத்தை யாருக்கு கொடுக்க எடுத்து சென்றார் என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×