என் மலர்
செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே நின்ற பேருந்து மீது மினி லாரி மோதல்: 4 பேர் படுகாயம்
ஜெயங்கொண்டம் அருகே நின்ற பேருந்து மீது மினி லாரி மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகில் உள்ள குவாகம் கிராமத்தை சேர்ந்தவர் ராமதுரை(வயது44). அரசு பஸ் டிரைவர். நேற்று முன்தினம் இரவு இவர் நகர பேருந்தை ஆண்டிமடத்திலிருந்து ஜெயங்கொண்டம் நோக்கி ஓட்டி சென்றார். அப்போது குளத்தூர் கைகாட்டியில் பயணிகளை ஏற்றி இறக்கி கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மினிலாரி ஒன்று பேருந்தின் பின்னால் மோதியது.
இதில் பேருந்தின் பின்புறம் சேதமாகியது. மினிலாரியில் பயணம் செய்த வரதராஜன்பேட்டையை சேர்ந்த மேரி, பெரியநாயகம், செபஸ்தியான், மற்றும் மினிலாரி டிரைவர் மரியஜெரோம் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து பேருந்து டிரைவர் ராமதுரை ஆண்டிமடம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






