என் மலர்tooltip icon

    செய்திகள்

    காளையார்கோவில் அருகே வீடு புகுந்து நகை, செல்போன் திருட்டு
    X

    காளையார்கோவில் அருகே வீடு புகுந்து நகை, செல்போன் திருட்டு

    காளையார்கோவில் அருகே வீடு புகுந்து நகை செல்போன் திருட்டு போலீசார் விசாரணை
    காளையார்கோவில்:

    காளையார்கோவில் தென்றல் நகரைச் சேர்ந்தவர் அந்தரைய்யா. இவரது மனைவி சாந்தி (வயது 49). அந்தரைய்யா மற்றும் அவரது மகன் இருவரும் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர். இதனால் சாந்தி மட்டும் தனியாக தென்றல் நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்தநிலையில் அவர் நேற்றுமுன்தினம் இரவு தனது கழுத்தில் இருந்த ஒரு பவுன் செயின், செல்போன் ஆகியவற்றை தனது படுக்கைக்கு அருகில் உள்ள மேஜையில் வைத்து விட்டு தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது, வீட்டினுள் நுழைந்த மர்மநபர் அவற்றை திருடிக் கொண்டு சென்றுவிட்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் காளையார்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    Next Story
    ×