என் மலர்
செய்திகள்

தாம்பரம் அருகே 2 பெண்களிடம் 13 பவுன் நகை பறிப்பு
தாம்பரம் அருகே 2 பெண்களிடம் 13 பவுன் நகை பறிப்பு போலீசார் விசாரணை
தாம்பரம்:
தாம்பரம் அருகே உள்ள மாடம்பாக்கம் பாலாஜி நகரை சேர்ந்தவர் புத்திரிபாய். இவர் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக உள்ளார். நேற்று பணி முடிந்து புத்திரிபாய் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் புத்தரிபாய் அணிந்து இருந்த 8½ பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி விட்டனர்.
இதே போல் மாடம்பாக்கம் குமரன்நகரில் மேரி என்பவர் வீட்டு முன் இரவு 9 மணிக்கு நின்று கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் முகவரி கேட்பது போல் நடித்து அவர் அணிந்து இருந்த 4½ பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி விட்டனர்.
இந்த 2 சம்பவம் குறித்து சேலையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






