என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 7 பேர் கைது
    X

    மதுரையில் ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 7 பேர் கைது

    ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேரிடம் கத்தி முனையில் வழிப்பறி செய்த 7 பேரை போலீ சார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை மதிச்சியம் நடுத் தெருவைச் சேர்ந்தவர் குருசாமி. இவரது மகன் தேவகனி (வயது28). இவர் அந்த பகுதியில் நடந்து சென்றபோது அதே பகுதியைச் சேர்ந்த தக்காளி என்ற அஜித், மீனாட்சி சுந்தரம் ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டு வழிப்பறி செய்தனர்.

    இதுதொடர்பாக மதிச்சியம் போலீசில் தேவகனி புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தக்காளி என்ற அஜித், மீனாட்சிசுந்தரம் ஆகியோரை கைது செய்தனர்.

    சோலையழகுபுரத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி, ஆட்டோ டிரைவர். இவர் ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள ஒரு கோவில் அருகே ஆட் டோவை நிறுத்தி நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிந்தாமணி சரவணன் (21), முத்துமணி (30), மணிகண்டன் (25), பிரேம்குமார் (23) ஆகியோர் மாமூல் கேட்டு கத்தியை காட்டி மிரட்டினர்.

    கருப்பசாமி பணம் கொடுக்க மறுத்ததால் அவரை தாக்கி விட்டு சட்டை பையில் வைத்திருந்த ரூ.800–ஐ பறித்து சென்று விட்டனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்தனர்.

    அனுப்பானடியை சேர்ந்தவர் செல்வேந்திரன் (32), லோடுமேன். இவர் தெப்பக்குளம் பகுதியில் நடந்துசென்றபோது அந்த பகுதியை சேர்ந்த தினேஷ்குமார், கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமாரை கைது செய்தனர்.

    Next Story
    ×